மாணாக்கர்கள் விபத்து தடுக்க நடை மேம்பாலம் அமுக்க கோரிக்கை
குமாரபாளையத்தில் மாணாக்கர்கள் விபத்து தடுக்க நடை மேம்பாலம் அமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.;
குமாரபாளையத்தில் மாணாக்கர்கள் விபத்து தடுக்க நடை மேம்பாலம் அமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது பற்றி பொதுமக்கள் கூறியதாவது: குமாரபாளையம் அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆனங்கூர் பிரிவு பகுதியில் உள்ளது. இந்த பள்ளிகளில் சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் கல்வி பயின்று வருகிறார்கள். இவர்கள் காலை பள்ளிக்கு வரும் போதும், பள்ளி முடிந்து வீட்டிற்கு திரும்பி செல்லும் போதும், பெரும்பாலான மாணாக்கர்கள் ஆனங்கூர் பிரிவு சாலையை கடந்துதான் செல்ல வேண்டும். போக்குவரத்து நெரிசல் மிகுந்த இந்த பிரிவு சாலையில், மாணாக்கர்கள் வாகனங்களில் சிக்கி அடிக்கடி விபத்துக்கு ஆளாகி வருகிறார்கள். இதனை தவிர்க்க இந்த பகுதியில் நடை மேம்பாலம் அமைக்க வேண்டும். அப்போது, மாணக்கர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் எவ்வித பாதிப்பும் இல்லாமல் சாலையை கடக்க உதவும். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த இடத்தில் நடை மேம்பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.