திருச்செங்கோடு கே.எஸ்.ஆர் மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் 13-வது பட்டமளிப்பு விழா
திருச்செங்கோடு கே.எஸ்.ஆர் மகளிர் கலை அறிவியல் கல்லூரியில்13-வது பட்டமளிப்பு விழாவில்சேலம் பெரியார் பல்கலைக்கழக அளவில் முதலிடம் பெற்ற மாணவிகளுக்கு தங்க நாணயம் பரிசாக வழங்கப்பட்டது;
கே.எஸ்.ஆர் மகளிர் கலை அறிவியல் கல்லூரியின் 13-வது பட்டமளிப்பு விழா கல்லூரியின் நிறுவனர் அரங்கில் நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் நிர்வாக இயக்குனர், பேராசிரியர் மோகன் அவர்கள் முன்னிலை வகித்தார். கல்லூரியின் முதல்வர் முனைவர் மா. கார்த்திகேயன் அவர்கள் பட்டமளிப்பிற்கான ஆண்டறிக்கையை வாசித்தார்.விழாவில் ஜிப்டி சொல்யூசன்ஸ் நிறுவனத்தின் மனிதவள இயக்குநர், சென்னை சத்ய பிரகாஷ் சேகரன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டுபெரியார் பல்கலைக்கழக அளவில் முதலிடம் பெற்ற கே.எஸ்.ஆர் மகளிர் கல்லூரியைச் சார்ந்த 4 மாணவிகளுக்கு தங்கநாணயம் மற்றும் விருது வழங்கினார். பல்கலைக்கழக தரவரிசையில் முதலிடம் பெற்ற 24 மாணவிகளுக்கும், கல்லூரி அளவில் முதலிடம் பெற்ற 5 மாணவிகளுக்கும் விருதுகள் வழங்கப்பட்டன. இளநிலை மற்றும் முதுநிலை துறையைச் சார்ந்த 348 மாணவிகளுக்கும் பட்டம் வழங்கப்பட்டது.