ஆரணியில் அமமுக சார்பில் அன்னதானம்.

ஆரணி பழைய பஸ்நிலையம் எம்ஜிஆர் சிலை அருகில் அமமுக சார்பில் அன்னதானம் நடைபெற்றது.;

Update: 2025-12-13 15:16 GMT
ஆரணி பழைய பஸ்நிலையம் எம்ஜிஆர் சிலை அருகில் அமமுக சார்பில் அன்னதானம் நடைபெற்றது. அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் பிறந்த நாள் முன்னிட்டு ஆரணி பழைய பஸ்நிலையம் அருகில் அமமுக சார்பில் மேற்குஆரணி ஒன்றியசெயலாளர் புருஷோத்தமன் தலைமையில் அன்னதானம் நடைபெற்றது. முன்னதாக கேக் வெட்டி கொண்டாடினர். இதில் நகரசெயலாளர் பன்னீர்செல்வம் அனைவரையும் வரவேற்றார். மேலும் இதில் ஒன்றிய செயலாளர்கள் ரமேஷ், நேத்தபாக்கம் சரவணன், மாநில பொதுக்குழு உறுப்பினர் தர், ஜெ பேரவை மாவட்ட இணைசெயலாளர் சீனிவாசன், மாவட்ட மாணவரணிசெயலாளர் நரேஷ்பாபு ஒன்றிய துணைச் செயலாளர் அகராபாளையம் ராஜா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Similar News