செங்குளவி கொட்டி 53 வயது பெண் பலி, 5 பேர் மருத்துவமனையில் அனுமதி

மதுராந்தகம் அருகே செங்குளவி கொட்டி 53 வயது பெண்மணி பலி, 5 பேர் மருத்துவமனையில் அனுமதி மதுராந்தகம் போலீசார் விசாரணை.;

Update: 2025-04-16 15:28 GMT
மதுராந்தகம் அருகே செங்குளவி கொட்டி 53 வயது பெண்மணி பலி, 5 பேர் மருத்துவமனையில் அனுமதி மதுராந்தகம் போலீசார் விசாரணை. செங்கல்பட்டு மாவட்டம் ,மதுராந்தகம் அருகே குருகுலம் கிராமத்தில் காட்டுவா மரத்தில் குளவி கூடு இருந்து வந்தது எதிர்பாராத விதமாக குளவிகள் கூட்டில் இருந்து வெளியே வந்ததால் அருகாமையில் இருந்தவர்களை கொட்டியது அப்பொழுது 53 வயது கொண்ட லட்சுமி மயங்கி விழுந்த நிலையில் சம்பவ இடத்திலேயே பலியானார். மேலும் கீதா, லட்சுமி, சுஜித், சஜித்து ஆகியோர் மதுராந்தகம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். லட்சுமி அவர்களின் கணவர் மனோகரன் மட்டும் மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து மதுராந்தகம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Similar News