நிரந்தர பட்டாவாக வழங்க வேண்டி 57-க்கும் மேற்பட்ட மக்கள் மனு
நிரந்தர பட்டாவாக வழங்க வேண்டி 57-க்கும் மேற்பட்ட மக்கள் மனு
திருச்செங்கோடு வட்டம்.மாணிக்கம் பாளையம்.கூத்தம்பூண்டி கிராமம் அண்ணா நகர்.பெரியார்நகர் உள்ளிட்ட பகுதிகளில் வசித்து வரும் விவசாய கூலி தொழிலாளர்கள் பெரும்பாலானோர் வாடகை வீட்டில் குடியிருந்து வந்தனர். இந்நிலையில் கடந்த 2005 ஆம் ஆண்டு அரசு சார்பில் இலவச வீட்டு நிலம் வழங்கினார்கள் அவர்களுக்கான குடியிருப்பதற்கு நிபந்தனை பட்டா வழங்கப்பட்டது பின்னர் நிரந்தரப்பட்ட வேண்டும் என்று இப்பகுதி பொதுமக்கள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருச்செங்கோடு வட்டாட்சியர். வருவாய் கோட்டாட்சியர் உள்ளிட்டோரிடம் மனு அளித்தனர். தற்போது அவ்விடத்தில் குடியிருந்து வரும் மக்களுக்கு அனுபவத்தில் உள்ள அளவிற்கு நிரந்தர பட்டா வழங்க வேண்டும் என்றும் எலச்சிபாளையம் ஒன்றிய கவுன்சிலர் சு.சுரேஷ் தலைமையில் அப்பகுதி இப்போது மக்கள் மனு அளித்தனர். இந்நிலையில் 2005 ஆம் ஆண்டு வழங்கப்பட்ட பட்டாவில் 300 சதுர அடி 500 சதுர அடி என ஒரு சென்ட் நிலத்திற்கு கீழ் தான் பட்டா வழங்கி உள்ளனர் இதனால் போதிய இடம் இருந்தும் அவர்களுக்கு அனுபவ அடிப்படையில் 57 குடும்பங்களுக்கு இலவசமாக பட்டா நிரந்தரமாக வழங்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் மருத்துவர் உமா அவர்களிடம் கோரிக்கை மனு அளித்தனர். மனுவைப் பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியர் சம்பந்தப்பட்ட திருச்செங்கோடு வருவாய் கோட்டாட்சியர் சுகந்தி. வட்டாட்சியர் விஜயகாந்த் உட்பட மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்தபோது சம்பவ இடத்திற்கு சென்று தீர்வு ஏற்படுத்த வேண்டும் என்று கூறினார்.