உடுமலையில் 6 மணி நேரம் திருவாசகம் முற்றோதல் செய்து உலக சாதனை

உலக சாதனைகள் 201 பேர் பங்கேற்பு

Update: 2024-10-27 13:20 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
திருப்பூர் மாவட்டம் உடுமலையில் உள்ள சோழிஸ்வரர் திருக்கோவிலில் மரகதம் யோகாலயம் ஓருங்கிணைப்பில் முதல் முறையாக இளைய தலைமுறையினரும் சிவனடியார்களும் 201 பேர் சேர்ந்து 6 மணி நேரம் தொடர்ச்சியாக திருவாசக முற்றோதலை செய்தது உலகின் முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது சாதனையை தொண்டர் சீர்பரவுவார் குருகுலத்தைச் சார்ந்த திருவாடுதுறை சைவ சித்தாந்த அறிஞர் ஜெயசிங் லிங்க வாசகம் துவக்கி வைத்தார். அதைத் தொடர்ந்து அடியார்கள் 51 பதியும் படிக்கத் தொடங்கினார்கள் மேலும் முயற்சியானது ஒழுக்கத்தையும் பண்பாட்டையும் கடவுள் பக்தியும் பொதுமக்களின் பார்வைக்கு கொண்டு சென்றதை எடுத்து உரைத்தார். இந்த நிகழ்ச்சி மரகதம் 1044 ஆவது உலக சாதனை என்பது குறிப்பிடத்தக்கது திரளாக சிவனடியார்கள் கலந்து கொண்டு திருவாசகம் படித்து இறைவன் நாமத்தை உச்சரித்தும் அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தனர் மேலும் 201 அடியார்களுக்கு நேரடியாக சான்றுகளும் பழக்கங்களும் வழங்கப்பட்டன குருகுலப்புலவர் திருமதி சொ.கமலம் ராமசுப்பிரமணியம் அம்மா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Similar News