வால்ராசாபாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 75 ஆவது தின விழா!

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 75-வது ஆண்டினை முன்னிட்டு மாணவர்கள் அரசியலமைப்புச் சட்டத்தின் முகவுரையை வாசித்து உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

Update: 2024-11-26 12:06 GMT
நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு ஒன்றியம், வால்ராசாபாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 75 ஆவது தின விழா கொண்டாடப்பட்டது.மக்களாட்சித் தத்துவத்தின் மாண்பினை உள்ளடக்கி இந்தியத் திருநாட்டினை வளமான பாதையில் முன்னெடுத்துச் செல்லும் ஓர் உன்னத உருவாக்கம், அண்ணல் அம்பேத்கர் வடிவமைத்துத் தந்த நமது இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 75-வது ஆண்டினை முன்னிட்டு மாணவர்கள் அரசியலமைப்புச் சட்டத்தின் முகவுரையை வாசித்து உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். தொடர்ந்து இத்தினத்தினைச் சிறப்பாகக் கொண்டாடும் பொருட்டு மாணவர்களுக்கு ஓவியம், பேச்சு மற்றும் வினாடி வினாடி வினா போட்டிகள், மகிழ் முற்றக்குழுக்களுக்கிடையில் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது. பள்ளியின் தலைமையாசிரியர் செ.தங்கவேல் தலைமையில் கொண்டாடப்பட்ட இவ்விழாவில் பள்ளியின் ஆசிரியர்கள் து.விஜய்,சு.பிரபு, பொ.நித்யா, பிரகாசம்,சத்யா, மெளனா ஆகியோர் கலந்துகொண்டனர். இதற்கான ஏற்பாடுகளைப் பள்ளியின் சாரண இயக்க மாணவர்கள் சிறப்பாகச் செய்திருந்தனர்.

Similar News