ராசிபுரம் அருகே மாணவ,மாணவிகளிடம் தகாத வார்த்தையில் பேசிய ஆசிரியர் மாணவிகள் குற்றச்சாட்டு
ராசிபுரம் அருகே மாணவ,மாணவிகளிடம் தகாத வார்த்தையில் பேசிய ஆசிரியர் மாணவிகள் குற்றச்சாட்டு
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த அணைப்பாளையம் பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 40-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வரும் நிலையில் இவர்களுக்கு 6 ஆசிரியர்கள் பள்ளியில் பணிபுரிந்து வருகின்றனர்.இந்த நிலையில் அப்பள்ளியில் பணி புரியும் சாந்தி என்ற ஆசிரியர் கடந்த சில தினங்களுக்கு முன்பு மாணவ,மாணவிகளை தகாத வார்த்தையில் திட்டியதாகவும், அடித்ததாகவும் கூறப்படுகிறது.இந்த நிலையில் பாதிக்கப்பட்ட மாணவர்கள் தங்களது பெற்றோர்களிடம் கூறவே இன்று பெற்றோர்கள் பள்ளிகைக்கு வருகை புரிந்து ஆசிரியர்களிடம் சரமாரி கேள்வி எழுப்பினர். பின்னர் தகவல் அறிந்து வந்த ராசிபுரம் வட்டார கல்வி அலுவலர் அருள்மணி பள்ளிக்கு வருகை புரிந்த பெற்றோர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். தொடர்ந்து வட்டார கல்வி அலுவலர் பெற்றோர்களிடம் புகார்களை பெற்று ஆசிரியரிடம் விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.