கரூர் மாவட்டத்தில் 9- ஆசிரியர்கள் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதுக்கு தேர்வு.

கரூர் மாவட்டத்தில் 9- ஆசிரியர்கள் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதுக்கு தேர்வு.

Update: 2024-09-04 07:52 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
கரூர் மாவட்டத்தில் 9- ஆசிரியர்கள் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதுக்கு தேர்வு. ஆண்டுதோறும் செப்டம்பர் 5 ஆசிரியர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நாளில் சிறந்த ஆசிரியர்களுக்கான டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது தமிழக அரசால் வழங்கப்பட்டு வருகிறது. இதில் தொடக்க, உயர்நிலை, தனியார், கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி, மாற்றுத்திறனாளி ஆசிரியர்கள், ஆங்கிலோ இந்தியன், சமூக பாதுகாப்பு என 7- பிரிவின் கீழ் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், தனியார் பள்ளி முதல்வர்கள், ஆராய்ச்சி, பயிற்சி நிலைய விரிவுரையாளர்கள் உள்ளிட்ட 385 பேர் 2024 ஆம் ஆண்டுக்கான டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதுக்கு தேர்வாகி உள்ளனர் இதில் கரூர் மாவட்டத்தில், குளித்தலை ஒன்றியம், சிவாயம் மேற்கு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி அறிவியல் பட்டதாரி ஆசிரியர் ரமேஷ், தாந்தோணி ஒன்றியம், வெள்ளியணை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, இடைநிலை ஆசிரியர் மனோகர், அரவக்குறிச்சி ஒன்றியம், ஈசனத்தம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, ஆசிரியர் சம்சாத் பானு தேர்வு செய்யப்பட்டனர். இதே போல உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி பிரிவில், கரூர் பெரிய குளத்துப்பாளையம், அரசு மேல்நிலைப்பள்ளி அறிவியல் பட்டதாரி ஆசிரியர் முரளி, பாலவிடுதி அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் கணேசன், மாயனூர் மாதிரி பள்ளி தலைமை ஆசிரியர் விஜயலட்சுமி தேர்வு செய்யப்பட்டனர். தனியார் பள்ளி பிரிவில் சின்ன தாராபுரம் ஆர் என் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர் ராமசாமி, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன பிரிவில், மாயனூர் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் முதுநிலை விரிவுரையாளர்கள் ரமணி, சரவணன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். இவர்கள் அனைவருக்கும் செப்டம்பர் 5ஆம் தேதி சென்னையில் நடைபெறும் விழாவில் விருது வழங்கப்பட உள்ளது.

Similar News