கரூர் மாவட்டத்தில் 95.20 மில்லி மீட்டர் மழை அளவு பதிவு. மாவட்ட நிர்வாகம் சற்று முன் அறிவிப்பு.
கரூர் மாவட்டத்தில் 95.20 மில்லி மீட்டர் மழை அளவு பதிவு. மாவட்ட நிர்வாகம் சற்று முன் அறிவிப்பு.
கரூர் மாவட்டத்தில் 95.20 மில்லி மீட்டர் மழை அளவு பதிவு. மாவட்ட நிர்வாகம் சற்று முன் அறிவிப்பு. வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்து தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இதன் காரணமாக ஃபெங்கல் புயல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் கனமழையும் பரவலாக அனைத்து மாவட்டங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை மையம் அறிவிப்பு செய்தது. இதன் அடிப்படையில் நேற்று காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது அவ்வப்போது லேசான மழையும் பெய்து வந்தது. மேலும் நேற்று இரவு முதல் விடிய விடிய பரவலாக அனைத்து பகுதிகளும் மழை பெய்துள்ளது. இந்த மழை நிலவரம் குறித்து மாவட்ட நிர்வாகம் சற்று முன் அறிவிப்பு செய்துள்ளது. அதன் அடிப்படையில் கரூரில் 5.60 மில்லி மீட்டர், அரவக்குறிச்சியில் 6.00 மில்லி மீட்டர், அணை பாளையத்தில் 4.00 மில்லி மீட்டர், க.பரமத்தியில் 4.80 மில்லி மீட்டர், குளித்தலையில் 9.60 மில்லி மீட்டர், மாவட்டத்தில் அதிகபட்சமாக தோகை மலையில் 14.60 மில்லி மீட்டர், கிருஷ்ணராயபுரத்தில் 11.00 மில்லி மீட்டர், மாயனூரில் 12.00 மில்லி மீட்டர், பஞ்சபட்டியில் 13.60 மில்லி மீட்டர், கடலூரில் 6.00 மில்லி மீட்டர், பாலவிடுதியில் 4.00 மில்லி மீட்டர் மைலம்பட்டியில் 4.00 மில்லி மீட்டர் என மொத்தம் 95.20 மில்லி மீட்டர் மழை அளவு பதிவாகியுள்ளது. இதனுடைய சராசரி அளவு 7.93 மில்லி மீட்டர் என மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.