ராசிபுரத்தில் பாஜக மாநிலத் துணைத் தலைவர் டாக்டர். K.P. இராமலிங்கம், பேட்டி
ராசிபுரத்தில் பாஜக மாநிலத் துணைத் தலைவர் டாக்டர். K.P. இராமலிங்கம், பேட்டி
ராசிபுரத்தில் வாஜ்பாய் 100.வது பிறந்தநாள் விழா.நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் புதிய பேருந்து நிலையம் பகுதியில் பாஜக சார்பில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அவர்களின் நூறாவது பிறந்த நாளை முன்னிட்டு மாநில துணைத்தலைவரும் சேலம் பெருங்கோட்ட பொறுப்பாளருமான டாக்டர் கே பி ராமலிங்கம் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநிலத் துணைத் தலைவர் / சேலம் பெருங்கோட்டப் பொறுப்பாளர் டாக்டர். K.P. இராமலிங்கம், முன்னாள் பிரதமர் வாஜ்பாய்-ன் நூற்றாண்டு விழா நாடு முழுவதும் மிகச் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. பாஜக சார்பில் நாடு முழுவதும் நகர, ஒன்றியங்களில் ஆங்காங்கே கிராமப்புறங்களிலும் ரத்ததான முகாம், மருத்துவ முகாம், ஏழை எளியோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. ஒரு தலைவரின் நூற்றாண்டு விழாவை மிகச் சிறப்பாக நாடு கொண்டாடுகிறது என்றால் இந்த நாட்டை அடுத்த கட்டத்திற்கு எடுத்துக் கொண்டு சேர்த்த மிகப்பெரிய தலைவர்களில் முதுபெரும் தலைவர் வாஜ்பாய் ஆவார் என்பதை உணர்த்துகிறது. அவரது ஆட்சிக் காலத்தில்தான் நாற்கர சாலை விரிவுபடுத்தும் மாபெரும் திட்டம் செயல்படுத்தப்பட்டது. நாட்டின் வளர்ச்சிக்கு இத்திட்டம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்தது. கிராமப்புறங்களில் உற்பத்தியாகும் பொருள்களும் எல்லா துறைமுகங்களையும் ஒருங்கிணைத்து உற்பத்தி மையங்களை ஒருங்கிணைத்து கிராமப்புற சிறு குறு உற்பத்தியாளர்கள் தங்கள் பொருள்களை வெளிநாடுகளுக்கு அனுப்ப அந்த திட்டம் பயன்பட்டது. இதன்மூலம் பொருளாதாரம் உயர்த்துவதற்கு அடித்தளம் இடப்பட்டது. இதுபோன்ற இந்த நாட்டின் வளர்ச்சிக்கு அடிப்படையான சட்டங்களை செயல்படுத்தியவர் வாஜ்பாய் என்பது உலகத்திற்கு தெரியும். வாஜ்பாய் அவர்களின் நல்லாட்சி பல்வேறு திட்டங்களை மேம்படுத்தி பரவலாக டிஜிட்டல் இந்தியா, செயற்கை நுண்ணறிவு போன்ற பல துறைகளில் வாஜ்பாய் அவர்களின் வழியில் பிரதமர் நரேந்திர மோடி இந்த தேசத்தின் வளர்ச்சிக்காக நல்லாட்சியை வாஜ்பாய் வழியில் அவரது ஆட்சியை தொடர்ந்து வழங்கி வருகிறார். அடுத்த தேர்தலில் வாக்குகளை வாங்குவதற்காக இலவசங்களை நம்பி இராமல், வருகின்ற 2047-ம் ஆண்டு வல்லரசு நாடாக உலகத்திற்கு வழிகாட்டும் நாடாக உருவாக்குவதற்கு புதிய கண்டுபிடிப்புகள் தாக்கத்தை இந்தியா ஏற்று வளர்ந்திட வேண்டும் என்ற உணர்வோடு வாஜ்பாய் வழியில் நல்லாட்சி நடத்தி வருகிறார். இதனால் நல்லாட்சி தினத்தை நாடு முழுவதும் சிறப்பாக நூற்றாண்டு விழாவை கொண்டாடி வருகிறோம். ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த கே பி இராமலிங்கம், இத் திட்டம் நமது நாட்டிற்கு அத்தியாவசியமானதாகும். 2047-ல் இந்த நாடு வல்லரசு நாடாக உருவாகுவதற்கு, பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கு ஒரே நாடு ஒரே தேர்தல் அவசியமா தேவையாகும். ஒரு ஆண்டில் பல தேர்தல் களை நடத்தினால் அரசன் திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்த தடையாக இருக்கும். தேர்தலுக்கு முன்பும் பின்பும் தேர்தல் நடத்தை நெறிமுறைகள் காலம் இருப்பதால் திட்டங்களை செயல்படுத்த முடியாமல் இடர்பாடுகள் வந்து விடுகிறது. அவற்றைத் தடுத்து செலவினங்களை குறைக்க உயர்ந்த நோக்கத்தோடு ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை மத்திய பாஜக அரசு கொண்டுவந்துள்ளது. ஓட்டுக்கு பணம் கொடுத்து வெற்றி பெற நினைக்கும் கட்சிகள்தான் இந்த திட்டத்தை எதிர்க்கும். ஜாதி, மத, பணம் கொடுத்து ஒக்கும் ஓட்டு வாங்க வேண்டும் என்ற கட்சிகள்தான் இந்த தேர்தலை எதிர்க்கின்றன. ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற நிலை வந்தால் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கும் நிலைமை குறையும். மத்திய மாநில அரசுகள் ஊழலற்ற ஆட்சியை நிறுவுவதற்கு ஒரே நாடு ஒரே தேர்தல் பயன்படும். வாக்குக்கு பணம் கொடுத்து தான் வெற்றி பெற முடியும் என்ற நிலைப்பாட்டில் மக்கள் நலத்திட்டங்களை கூற முடியாமல் சுயநலமாக செயல்படும் கட்சிகள் தான் இந்த திட்டத்தை எதிர்கின்றன. கூட்டணி ஆதரவில்லாமல் வாக்கு பெற முடியாதவர்கள் தான் எதிர்க்கின்றார்கள். இலட்சியமற்ற அரசியல் கட்சிகளுக்கு இந்த திட்டம் பயன்படாது. தங்களுக்கென்று தனி செல்வாக்கு, கட்சியின் மக்கள் நலத் திட்டங்கள், கட்சியின் லட்சியம் ஆகியவற்றிற்கு வாக்களிப்பார்கள் என கருதுபவர்கள் இந்த திட்டத்தை வரவேற்பார்கள். ஜாதி மத பேதம் இன்றி தேசம் மட்டுமே முன்னிலைப்படுத்தி ஒரே நாடு ஒரே தேர்தல் செயல்படுத்தப்படுகிறது என்றார். மாநில உரிமைகளை ஒரே நாடு ஒரே தேர்தல் பறிக்காது என்றார். எம்ஜிஆர் உடன் மோடியை ஒப்பிட முடியாது என செல்லூர் ராஜு கூறியுள்ளாரே என்ற கேள்விக்கு பதில் அளித்த பாஜக மாநில துணைத்தலைவர் K.P. இராமலிங்கம், ஒருவர் கொண்டுவரும் திட்டத்தை எதிர்க்கட்சியாக இருந்து எதிர்க்கும் கட்சியினர், அவர்கள் ஆட்சிக்கு வரும்பொழுது அந்தத் திட்டத்தை தொடர்வார்கள் என்பதற்கு எம்ஜிஆர் கொண்டு வந்த சத்துணவு திட்டம், மு. கருணாநிதி கொண்டு வந்த சத்துணவில் முட்டை, ஜெயலலிதா கொண்டு வந்த அம்மா உணவகம் போன்ற திட்டங்கள் ஆகும். உலகம் முழுவதும் அறிந்த தலைவராக பிரதமர் நரேந்திர மோடி திகழ்கிறார். பாரத தேசத்திற்கு அடையாளம் மகாத்மா காந்தி கூறியதை போல இப்போது பிரதமர் நரேந்திர மோடியை உலக நாட்டினர் கூறுகின்றனர். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து தேர்தல் அறிவித்த பிறகு பாஜக முடிவு தெரிவிக்கும். பாஜகவுக்கு நாடு முழுவதும் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்படுவது குறித்த கேள்விக்கு பதில் அளித்த கே பி இராமலிங்கம், வருகின்ற 2047-ம் ஆண்டு, வளர்ச்சி அடைந்த பாரதத்தை நோக்கி, 2024 செப்டம்பர் 2-ம் தேதி பிரதமர் தம்மை கட்சியின் உறுப்பினராக இணைத்துக் கொண்டு, புதிய ரத்தம் பாய்ச்சியுள்ளார். இக்கட்சியில் ஒன்றிய, நகர தலைவர்கள் 45 வயதுக்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டோடு இளைஞர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிகளும் ஒரு ஒன்றிய தலைவர் பதவி மகளிர்க்கு வழங்கப்பட்டு பிரதிநிதித்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் பட்டியல் இனத்தைச் சேர்ந்த 10 பேருக்கு ஒருவர், இருவர் மூவர் என்ற அடிப்படையில் இந்தக் கட்சியை அடுத்த கட்டத்திற்கு வலிமையான பாரதத்தை உருவாக்கும் வரை ஆட்சி பொறுப்பை இன்னும் வலிமையோடு பணியாற்றுவதற்காக தான் கட்சியை வலிமைப்படுத்தி வருகிறோம் என தெரிவித்தார். மாநில அரசின் ஆல்பாஸ் முறை குறித்த கேள்விக்கு பதில் அளித்த K.P. இராமலிங்கம், இளைஞர்கள் தங்களை இன்று இளைஞர்கள் தங்களை தவறான வழியில் கொண்டு சேர்க்கும். இளம் வயதில் நன்கு கல்வி கற்று முன்னேறினால் தான் எதிர்காலம் சிறப்பாக இருக்கும். இந்த அடிப்படையிலேயே மத்திய அரசு பள்ளிகளில் ஆல் பாஸ் முறை கொண்டுவரப்படவில்லை. ஆனால் கல்வி பற்றி எந்த சிந்தனையும் இல்லாமல் மாநில திமுக அரசு ஆல் பாஸ் முறை நடைமுறைப்படுத்துவது ஏற்கத்தக்கது அல்ல. சமுதாயத்தின் எதிர்காலத்தைப் பற்றி கொஞ்சம் கூட கவலைப்படாத சுயநலவாதிகள் தான் தமிழ்நாட்டு அமைச்சரவையில் உள்ளார்கள் என்றும் பாஜக மாநிலத் துணைத் தலைவர் சேலம் பெருங்கோட்ட பொறுப்பாளர் டாக்டர் K.P. இராமலிங்கம் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் நாமக்கல் மாவட்ட பாஜக தலைவர் N.P. சத்தியமூர்த்தி, ராசிபுரம் நகர தலைவர் வேலு ,மாநில, மாவட்ட, நகர நிர்வாகிகள், தொண்டர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.