பெரம்பலூர் SDPI கட்சி மாவட்ட செயற்குழு

பெரம்பலூர் நகர் பகுதியில் பொது மக்களுக்கு பெரிய தொல்லையாக இருக்கும் தெரு நாய்களை கட்டுப்படுத்த நகராட்சி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.;

Update: 2025-07-17 18:09 GMT
பெரம்பலூர் SDPI கட்சி மாவட்ட செயற்குழு பெரம்பலூர் மாவட்டம் SDPI கட்சியின் மாவட்ட செயற்குழு கூட்டம் 17-07-25 அன்று மாலை 5 மணி அளவில் மாவட்ட தலைமையகத்தில் நடைபெற்றது... இக்கூட்டத்தினை மாவட்ட பொதுச்செயலாளர் செய்யது அபுதாஹிர் வரவேற்புரை வழங்கி துவங்கி வைத்தார். மாவட்ட தலைவர் முஹம்மது ரபீக் அவர்கள் தலைமை தாங்கி நடத்தி வைத்தார்கள்.. இக்கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக மாநில செயலாளரும், திருச்சி மண்டல தலைவருமான ஷபீக் அஹமது அவர்கள் வருகை புரிந்திருந்தார்கள்... மேலும் மாவட்ட துணைத் தலைவர் முஹம்மது பாரூக், மாவட்ட அமைப்பு பொதுச்செயலாளர் அப்துல் கனி, மாவட்ட செயலாளர்கள் அஸ்கர் அலி, பொருளாளர் முகையதீன் பாரூக், செயற்குழு உறுப்பினர்கள் ஷாஜஹான், முஹம்மது அலி, நூர் முஹம்மது, பெரம்பலூர் சட்டமன்ற தொகுதி தலைவர் முஹம்மது ரபீக் ஆகியோர் கலந்து கொண்டனர்... இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் : 1) SDPI கட்சியின் தீவிர உறுப்பினர் சேர்க்கையின் ஒருபகுதியாக கட்சியில் உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்த வேண்டும். 2) வருகின்ற தேர்தலில் SDPI கட்சியின் பங்களிப்பை உறுதிசெய்ய பூத் கமிட்டிகளை அதிகப்படுத்த வேண்டும். 3) பெரம்பலூர் நகர் பகுதியில் பொது மக்களுக்கு பெரிய தொல்லையாக இருக்கும் தெரு நாய்களை கட்டுப்படுத்த நகராட்சி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். போன்றவை தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது...

Similar News