10 நாட்களில் சிமெண்ட் சாலை காலி பெண்கள் சாலை மறியல்

திருத்தணி நகராட்சியில் 14 வது வார்டில் தரமற்ற சிமெண்ட் சாலை அமைத்ததில் 10 நாட்களில் சிமெண்ட் சாலை காலி பெண்கள் சாலை மறியல் காவல்துறை மற்றும் நகராட்சி அதிகாரிகளிடம் கடும் வாக்குவாதம் செய்த பெண்கள்

Update: 2024-09-10 15:29 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
திருத்தணி நகராட்சியில் 14 வது வார்டில் தரமற்ற சிமெண்ட் சாலை அமைத்ததில் 10 நாட்களில் சிமெண்ட் சாலை காலி பெண்கள் சாலை மறியல் காவல்துறை மற்றும் நகராட்சி அதிகாரிகளிடம் கடும் வாக்குவாதம் செய்த பெண்கள் திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி நகராட்சியில் 14 வது வார்டு பகுதியில் கீழ் பஜார் பகுதியில் 200 க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளது இந்த பகுதியில் கடந்த 30 நாட்களுக்கு முன்பு சிமெண்ட் சாலை 33 லட்சத்தில் போடப்பட்டது இந்த சாலையை பூச்சி நரசிம்மன் என்பவர் ஒப்பந்தம் எடுத்து சாலை பணியை போட்டுள்ளார் இந்த சாலை சிமெண்ட் சாலை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வந்த 10 நாட்களில் அதிக தூசி வெளியே வந்து 200க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ள பகுதிகளில் பொதுமக்களுக்கு தூசி பறந்து உள்ளது இதனால் நுரையீரல் பிரச்சனை உடல் உபாதை பிரச்சனை ஏற்பட்டுள்ளது இதனால் சாலை சரியில்லை பத்து நாட்களுக்குள் சிமெண்ட் சாலை காலி ஆகிவிட்டது என்று குற்றச்சாட்டை முன்வைத்து அந்த பகுதியைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர் சாலை மறியல் செய்த பெண்களிடம் திருத்தணி நகராட்சி அதிகாரிகள் மற்றும் காவல் துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை செய்தனர் பேச்சுவார்த்தை ஏற்க மறுத்து 30 நிமிடத்திற்கு மேலாக அதிகாரிகளிடத்தில் கடும் வாக்குவாதத்தில் பெண்கள் ஈடுபட்டனர் இந்த சிமெண்ட் சாலை ஏழு நாட்களுக்குள் சரி செய்து கொடுக்கிறோம் என்று நகராட்சி அதிகாரிகள் உறுதி அளித்தனர் இதனை அடுத்து சாலை மறியல் செய்த பெண்கள் கலைந்து சென்றனர் இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Similar News