10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் அன்னை தெரசா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவருக்கு தாளாளர் பாராட்டு.
10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் அன்னை தெரசா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவருக்கு தாளாளர் மற்றும் பெற்றோர்கள் ஆசிரியர்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர் .;
ஜெயங்கொண்டம் மே:17 அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அன்னை தெரசா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 10 ஆம் தேர்வு எழுதிய மாணவர் ராகுல்ராஜ் 500-க்கு 489 மதிப்பெண் பெற்று பள்ளியில் முதலிடம் பிடித்து சாதனை புரிந்தார். மேலும் இப்பள்ளியில் பயின்ற 50%மாணவர்கள் 500-க்கு 450 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றுள்ளனர் 100 சதவீதம் தேர்ச்சியும் பெற்றுள்ளனர்.மாணவர் ராகுல்ராஜ் மற்றும் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்கள் அனைவரையும் அன்னை தெரசா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி தாளாளர் பரப்ரம்மம் முத்துக்குமரன்,பள்ளி முதல்வர் தனலெட்சுமி,செயலர் வேல்முருகன்,பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் செந்தில், செயலாளர் பாலமுருகன் பள்ளி துணைத் தலைவர் திருமதி உஷாமுத்துக்குமரன் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.