நாகூர் பிரசன்ன வெங்கடாஜலபதி ஆலயத்தில் 1008 அகல்விளக்கு தீப வழிபாடு
நாகப்பட்டினம் மாவட்டம் நாகூரில் அயோத்தி ராமர் கோவில் திறப்புவிழாவை முன்னிட்டு பிரசன்ன வெங்கடாஜலபதி ஆலயத்தில் 1008 அகல் விளக்கு தீபம் ஏற்றி பொது மக்கள் வழிபாடு நடத்தினர்.;
வழிபாடு நடத்திய மக்கள்
நாகப்பட்டினம் மாவட்டம் நாகூரில் அயோத்தி ராமர் கோவில் திறப்புவிழாவை முன்னிட்டு நாகூர் பிரசன்ன வெங்கடாஜலபதி ஆலயத்தில் 1008 அகல் விளக்கு தீபம் ஏற்றி பொது மக்கள் வழிபாடு அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழா இன்று கோலாகலமாக நடைபெற்றது.
இன்று மதியம் 12.20 மணி அளவில் நடைப்பெற்ற இந்நிகழ்வில் பிரதமர் நரேந்திர மோதி கலந்துகொண்டு கோவிலில் வைக்கப்பட்டிருந்த ‘ராம் லல்லா எனப்படும் பாலராமர் சிலைக்கு பிரதிஷ்டை செய்தார்.
சிறப்பு வழிபாட்டுக்குப் பின்னர் அச்சிலையின் கண்களை மூடியிருந்த மஞ்சள் துணி அகற்றப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டது. இதனையொட்டி இந்தியா முழுவதும் பல்வேறு கோவில்களில் சிறப்பு பூஜைகள் பொது மக்கள் வழிபாடு செய்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக நாகை மாவட்டம் நாகூர் பிரசன்ன வெங்கடாஜலபதி ஆலயத்தில் 1008 அகல் விளக்கு தீபங்கள் ஏற்றி பொது மக்கள் வழிபாடு செய்தனர்.
அகல் விளக்கு தீபத்தால் ஜெய் ஸ்ரீ ராம் என எழுதி சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. இப் பூஜையில் திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு செய்தனர்