108 சேவையை தமிழக அரசே ஏற்று நடத்த வேண்டுகோள்
108 சங்கத்தின் சார்பில் மாதாந்திர கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது;
108 சேவையை தமிழக அரசே ஏற்று நடத்த வேண்டுகோள் பெரம்பலூர் மாவட்டம் தமிழ்நாடு 108 அவசர ஊர்தி தொழிலாளர்கள் முன்னேற்ற சங்கத்தின் மாதாந்திர கலந்தாய்வு கூட்டம் பழைய நகராட்சி அலுவலக மைதானத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு சங்கத்தின் மாவட்டச் செயலாளர் அசோக்குமார் தலைமை தாங்கினார்.மாவட்ட கவுரவ தலைவர் சுந்தரவடிவேல் முன்னிலை வகித்தார். மாவட்ட தலைவர் சுரேஷ் சங்கத்தின் கோரிக்கைகளை விளக்கி பேசினார். இதில் பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.