கரூரில்,116 அடி உயர ராஜகோபுரத்திற்கு 160 கிலோ எடையில் 7-வகையான மலர் மாலை ஏற்றம்.
கரூரில்,116 அடி உயர ராஜகோபுரத்திற்கு 160 கிலோ எடையில் 7-வகையான மலர் மாலை ஏற்றம்.
கரூரில்,116 அடி உயர ராஜகோபுரத்திற்கு 160 கிலோ எடையில் 7-வகையான மலர் மாலை ஏற்றம். ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு கரூரில் பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ அலங்காரவல்லி சௌந்தரநாயகி உடனுறையாகிய கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் 116 அடி உயர ராஜகோபுரத்திற்கு 160 கிலோ எடையில் ஏழு வகையான மலர் மாலைகள் கொண்டு ராஜகோபுரத்தின் உச்சியில் ஏற்றும் நிகழ்வு நடைபெற்றது. பக்தர்கள் பரவசம். கரூர் மாநகர மையப்பகுதியில் வீற்றிருக்கும் பழமை வாய்ந்த சிவாலயங்களில் ஒன்றான அருள்மிகு ஸ்ரீ அலங்காரவல்லி சௌந்தரநாயகி உடனூறாகிய பசுபதீஸ்வரர் ஆலயத்தில் இன்று ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு சிவாய நம குழு சார்பில் ஆலய கோபுரத்திற்கு ஏற்றவாறு 116 அடி உயரத்தில்,160 கிலோ எடை கொண்ட 7- வகையான மலர் மாலைகள் ராஜகோபுரத்தின் உச்சியில் ஏற்றப்பட்டது இதில் செவ்வந்தி, பச்சை,துளசி, விரிச்சி,மாசி பச்சை, கோழி கொண்டை,மல்லிகைப்பூ உள்ளிட்ட ஏழு வகையான மலர்களைக் கொண்டு சிறப்பாக தயார் செய்யப்பட்டது. தயார் செய்த சிறப்பு மலர் மாலைக்கு சிறப்பு பூஜைகள், தீபாரதனைகள் காண்பிக்கப்பட்டு கோயில் உட்பிரகாரத்தில் பக்தர்கள் தோளில் சுமந்தவாறு சுற்றி வந்து மலர் மாலையை ராஜகோபுரத்தின் முன்புறம் கொண்டு வந்தனர். பின்னர் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பூஜிக்கப்பட்ட மலர் மாலையை ராஜகோபுரத்தின் உச்சியில் ஏற்றினர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியை சிவாய நம குழு சார்பில் ஆண்டுதோறும் சிறப்பாக செய்து வருகின்றனர்.