விருதுநகர் மாவட்டத்தில் 10 மாதத்தில் 6,219 கிலோ குட்கா பறிமுதல்
விருதுநகர் மாவட்டத்தில் 10 மாதத்தில் 84 கிலோ கஞ்சா,6219 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது, என விருதுநகரில் எஸ்.பி., ஸ்ரீனிவாசபெருமாள் கூறினார்.
விருதுநகர் மாவட்டத்தில் 10 மாதத்தில் 84 கிலோ கஞ்சா,6219 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது, என விருதுநகரில் எஸ்.பி., ஸ்ரீனிவாசபெருமாள் கூறினார்.மேலும் அவர் கூறியதாவது: மாவட்டத்தில் 2023 ஜன.1 முதல் அக். 31 வரை கஞ்சா விற்றவர்கள் மீது 137 வழக்குகள் பதியப்பட்டுள்ளன. அதில் 247 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
அவர்களிடம் இருந்து 84 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது. இதன் மதிப்பு ரூ.8 லட்சத்து 23 ஆயிரத்து 10 ஆகும். 40 டூவீலர்கள் 2 ஆட்டோக்கள், ஒரு கார் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. நீதிமன்ற நிலுவையில் இருந்த கஞ்சா வழக்குகளில் 15 என 94 வழக்குகள் விசாரணை முடிக்கப்பட்டு தண்டனையில் முடிந்துள்ளது.
மேலும் அக்.29ல் ஆந்திரா மாநிலத்தில் இருந்து கேரளா மாநிலத்திற்கு 2 கார்களில் 120 கிலோ கஞ்சா கொண்டு செல்வதாக கிடைத்த ரகசிய தகவலின் படி ஏ.டி.எஸ்.பி., அசோகன், விருதுநகர் டி.எஸ்.பி., பவித்ரா, ஊரக இன்ஸ்பெக்டர் மாரிமுத்து ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு 2 கார்களை பறிமுதல் இருவரை பிடித்து மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவிடம் ஒப்படைக்கப்பபட்டது.
தடை குட்கா, பான் மசாலா, புகையிலை பொருட்கள் விற்பனை சம்மந்தமாக ரோந்து செய்து கண்காணிக்கப்பட்டு 329 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அதில் ரூ.43 லட்சத்து 98 ஆயிரத்து 65 மதிப்புள்ள 6219 கிலோ புகையிலை பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளது. வழக்கில் 430 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து 35 டூவீலர்கள், 7 ஆட்டோக்கள், 17 கார்கள் கைப்பற்றப்பட்டுள்ளது. நீதிமன்ற நிலுவையில் இருந்த புகையிலை பொருட்கள் சம்மந்தப்பட்ட 70 வழக்குகள் என 275 வழக்குகள் விசாரணை முடிக்கப்பட்டு தண்டனையில் முடிந்துள்ளது.போக்சோ வழக்குகளில் 196 வழக்குகள் பதியப்பட்டு 253 பேர் கைது செய்யப்பட்டனர். பதிவு செய்யப்பட்ட 5 வழக்கும், நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த 46 வழக்குகள் என 51 வழக்குகள் விசாரணை முடிக்கப்பட்டு தண்டனையில் முடிந்துள்ளது.மாவட்டத்தில் கொலை, கொள்ளை, திருட்டு வழிப்பறி, குற்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்களை கட்டுப்படுத்தும் வகையில் மாவட்டத்தில் உள்ள அனைத்து சோதனை சாவடி, முக்கிய சந்திப்புகளில் வாகன சோதனை செய்து, இந்தாண்டில் 3 லட்சத்து 05 ஆயிரத்து 873 மோட்டார் வாகன மட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது, என்றார்.