திருப்பூர் அருகே கார் மீது மோதிய அரசு பேருந்து
திருப்பூர் கூலிபாளையம் நால் ரோட்டில் கார் மீது அரசு பேருந்து மோதி விபத்துக்குள்ளானது.
திருப்பூரில் இருந்து ஈரோடு நோக்கி கோவிலுக்கு ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பெண்கள் மற்றும் 2 ஆண்கள் என 5 பேர் இன்று காலை சென்று கொண்டிருந்தனர். இதுபோல் ஈரோட்டில் இருந்து திருப்பூர் நோக்கி அரசு பஸ் ஒன்று 20 பயணிகளுடன் வந்து கொண்டிருந்தது.
இந்த நிலையில் ஊத்துக்குளி அருகே கூலிபாளையம் நால் ரோட்டில் அரசு பஸ் வந்த போது நிலை தடுமாறி டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து, எதிரே வந்த கார் மீது மோதியதாக தெரிகிறது.
இதனால் பஸ்சில் இருந்த பயணிகள் அலறினர். அலறல் சத்தம் கேட்டு அந்த பகுதியில் பொதுமக்கள் குவிந்தனர். இருப்பினும் இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் பயம் ஏற்படவில்லை. இது குறித்து ஊத்துக்குளி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். இந்த விபத்து சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.