சேலம் அருகே மோட்டார் சைக்கிளுடன் பள்ளத்தில் விழுந்தவர் சாவு

அயோத்தியாப்பட்டணம் அருகே இருசக்கர வாகனத்தில் சென்றபோது நிலைதடுமாறி கீழே விழுந்தவர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.;

Update: 2023-12-26 02:18 GMT

சாலை விபத்து 

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ள தும்பல் பகுதியை சேர்ந்தவர் இம்சான் (33). இவர், சீலநாயக்கன்பட்டி பைபாசில் இருந்து வாழப்பாடி நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்றார். அயோத்தியாப்பட்டணம் அருகே சென்ற போது  நிலைதடுமாறி சாலையோர பள்ளத்தில் மோட்டார் சைக்கிளுடன் கீழே விழுந்தார். இந்த விபத்தில் இம்சான் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இது குறித்து தகவல் அறிந்த காரிப்பட்டி போலீசார் விரைந்து சென்று, உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News