கள்ளச்சாராய விற்பனையில் ஈடுபட்ட நபர் கைது!
கறம்பக்குடியில் அத்துமீறி கள்ளச்சாராயத்தை விற்ற முத்துக்குமார் என்பவரை போலீசார் கைது செய்தனர்; 10 லிட்., கள்ளச்சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது.
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியில் 10 லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல் கள்ளச்சாராயம் விற்பனையில் ஈடுபட்ட கறம்பக்குடி குளந்திரான்பட்டு மேற்க்கு தெருவை சேர்ந்த முத்துக்குமாரை போலீசார் கைது செய்து புதுக்கோட்டை சிறையில் அடைத்தனர்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் கஞ்சா போதை மாத்திரை போதை ஊசி தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ள குட்கா பொருட்கள் கள்ளச்சாராயம் கள்ளச்சந்தையில் மது விற்பனை லாட்டரி விற்பனை உள்ளிட்ட சட்ட விரோத செயல்களில் ஈடுபடுபவர்களை கண்டறிந்து அவர்களை கைது செய்து நடவடிக்கை மேற்க்கொள்ள மாவட்ட கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே உத்தரவிட்டுள்ளார். அதன் அடிப்படையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் பணி புரியும் காவல்துறையினரும் அதே போல் தனிப்படை போலீஸ்சாரும் தொடர்ச்சியாக சட்ட விரோத செயல்களில் ஈடுபடுபவர்களை கண்டறிந்து கைது செய்து வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக கறம்பக்குடியில் தொடர்ந்து குட்கா கஞ்சா கள்ளச்சாராயம் உள்ளிட்ட சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வரும் நபர்களை தொடர்ந்து கறம்பக்குடி காவல் உதவி ஆய்வாளர் சாமிக்கண்ணு அதிரடி காட்டி அவர்களை கைது செய்து வருகிறார்.
அதேபோல் கறம்பக்குடி குளந்திரான்பட்டு மேலத்தெருவில் இன்று கள்ளச்சாராயம் விற்பனை நடைபெற்று வருவதாக போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற கறம்பக்குடி காவல் உதவி ஆய்வாளர் சாமிக்கண்ணு வீரையன் மகன் முத்துக்குமாரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர் விசாரணையின் அடிப்படையில் இரண்டு கேன்களில் பத்து லிட்டர் சாராயம் விற்பனைக்கு வைத்திருந்தது தெரிய வந்தது. கறம்பக்குடி காவல் உதவி ஆய்வாளர் சாமிக்கண்ணு 10 லிட்டர் சாராயம் அவற்றிற்கு எரிக்க தேவையான பாத்திரங்களை பறிமுதல் செய்து முத்துக்குமாரை கைது செய்து புதுக்கோட்டை சிறையில் அடைத்தனர்.
தொடர்ந்து கறம்பக்குடியில் கள்ளச்சாராயம் குட்கா கஞ்சா உள்ளிட்ட குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வருபவர்களை தொடர்ந்து அதிரடி காட்டி கைது செய்து வரும் கறம்பக்குடி காவல் உதவி ஆய்வாளர் சாமிக்கண்ணுவை சமூக ஆர்வலர்கள் மற்றும் அப்பகுதி கிராம மக்கள் பாராட்டி வருகின்றனர்.