ஆரல்வாய்மொழியில் தாய் 2 குழந்தைகளுடன் தற்கொலைக்கு  முயன்ற பெண்

ஆரல்வாய்மொழியில் தாய் 2 குழந்தைகளுடன் தற்கொலைக்கு  முயன்ற பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2024-06-28 10:30 GMT
பைல் படம்

கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி தேவசகாயம் மவுண்ட் பகுதியை சேர்ந்தவர் ஜார்ஜ் மனைவி பேபி ( 54).  இவரது ம வெண்ணிலா (28).  கடந்த 9 வட்டங்களுக்கு முன்பு கன்னியாகுமரி பகுதியை சேர்ந்த அலக்ஸ் ராஜா என்பவருடன்  திருமண நடந்தது.

இவர்களுக்கு எட்டு வயதில் ஒரு மகன்,  6 வயதில் ஒரு மகளும்  உள்ளனர். வெண்ணிலாவின்  மகளுக்கு இருதய நோய் பாதிப்பு இருப்பதால் மருத்துவ செலவிற்காக தனது தாய் மூலமாக ஒரு சுய உதவி குழுவிலும், ஒரு பைனான்ஸ் மற்றும் தனித்தனி . நபர்களிடம் கடனாக 6 லட்சம் வரை பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

ஆனால் சிகிச்சை செலவு அதிகமாகி கொண்ட நிலையில் கடனை அடைக்க முடியாமல் மிகவும் அவதிப்பட்டு உள்ளனர்.       கடன் கொடுத்தவர்கள் கடனுக்கு நெருக்கி உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் மன வருத்தத்தில் இருந்த வெண்ணிலா அரளி விதை அரைத்து தனது தாயான போக்கும், தனது இரு குழந்தைகளுக்கும் கொடுத்து விட்டு தானும் சாப்பிட்டு உள்ளார்.    

 இதில் நான்கு பேரும் மயங்கி கடந்ததை பார்த்த அக்கம் பக்கத்தினர் ஆசாரி பள்ளம்  அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆரல்வாய்மொழி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News