வேடசந்தூர் அருகே சாலை விபத்தில் தொழிலாளி பலி
வேடசந்தூர் அருகே சாலை விபத்தில் தொழிலாளி பலியானர்.;
By : King 24X7 News (B)
Update: 2023-12-24 11:24 GMT
கோப்பு படம்
திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூரை அடுத்த ரெங்கநாதபுரம் பகுதியைச் சோந்த கருப்பணன் மகன் சுரேஷ் என்ற மருதமுத்து (30).கூலித் தொழிலாளியான இவா், தனது தாய் வீரமுத்துலட்சுமியுடன் (60) இரு சக்கர வாகனத்தில் வேடசந்தூரில் இருந்து ரெங்கநாதபுரம் நோக்கி சனிக்கிழமை சென்றாா்.
வேடசந்தூா் கருக்காம்பட்டி அருகே நிலை தடுமாறிய சுரேஷ், இரு சக்கர வாகனத்துடன் சாலையோரமாக கீழே விழுந்தாா். இதில் பலத்த காயமடைந்த சுரேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
வீரமுத்துலட்சுமி பலத்த காயங்களுடன் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.இதுகுறித்து வேடசந்தூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.