கருப்பர் கோயிலில் பக்தர்களுக்கு பிரியாணி

கறம்பக்குடி கருப்பர் கோயில் திருவிழாவில் பக்தர்களுக்கு இஸ்லாமிய மக்கள் பிரியாணி வழங்கி மகிழ்ந்தனர்.

Update: 2024-05-08 16:29 GMT

 புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியில் பிரசித்தி பெற்ற பழமை வாய்ந்த கருப்பர் கோயில் உள்ளது. இந்த கோயிலின் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டிற்கான திருவிழா கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு காப்பு கட்டுதலுன் தொடங்கி இன்று திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது.

இந்த கருப்பர் கோயிலின் திருவிழாவை முன்னிட்டு ராசி பரூக் என்ற இஸ்லாமியர் ஒருவர் கடந்த ஒரு வார காலமாக நீர் மோர் பந்தல் வழங்கிய நிலையில் இன்று கருப்பர் கோயில் திருவிழாவிற்கு வருகை தந்த பக்தர்களுக்கு சிக்கன் பிரியாணி வழங்கி நெகிழ்ச்சியை ஏற்படுத்தினார். இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று பிரியாணியை வாங்கி உண்டு மகிழ்ந்தனர்.

மேலும் கருப்பர் கோயில் திருவிழாவுக்கு இஸ்லாமியர்கள் பிரியாணி வழங்கிய நிகழ்வு இந்து முஸ்லிம் ஒற்றுமைக்கும் மத நல்லிணக்கத்திற்கும் எடுத்துக்காட்டாக திகழ்ந்தது.

Tags:    

Similar News