காவல்துறை அனுமதி மறுப்பால் அதிமுக பொதுக்கூட்டம் ரத்து
அதிமுக பொதுக்கூட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுத்ததால் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.
Update: 2023-10-29 02:04 GMT
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட நொய்யல் குறுக்கு சாலையில் அதிமுக கட்சி துவங்கி 52 ஆம் ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் நேற்று மாலை 6 மணி அளவில் முன்னாள் அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் தலைமையில் நடைபெறுவதாக கரூர் மாவட்ட அதிமுக சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த கூட்டத்திற்கு வேலாயுதம்பாளையம் காவல்துறையினர் அனுமதி மறுத்துள்ளனர். இதனால், இந்த கூட்டம் த்து செய்யப்படுவதாகவும், தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்படுவதாகவும் கரூர் மாவட்ட அதிமுக சார்பில் தெரிவித்துள்ளனர்.