மக்களுடன் தான் கூட்டணி - அதிமுக வேட்பாளர் ஆற்றல் அசோக்குமார்
மக்களுடன் தான் கூட்டணி என அதிமுக வேட்பாளர் ஆற்றல் அசோக்குமார் தெரிவித்துள்ளார்.;
செய்தியாளர்களை சந்தித்த வேட்பாளர்
ஈரோடு அதிமுக கட்சி அலுவலகத்தில் ஈரோடு நாடாளுமன்ற வேட்பாளர் அறிமுக கூட்டம் ஈரோடு மாவட்ட செயலாளர் கே.வீராமலிங்கம் தலைமையில் நடைபெற்றது.இக்கூட்டத்தில்ஈரோடு நாடளுமன்ற வேட்பாளராக அறிவிக்கப்பட்ட ஆற்றல் அசோக்குமாரை கட்சி நிர்வாகிகளுக்கு அறிமுகம் செய்து வைத்தனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக வேட்பாளர் ஆற்றல் அசோக்குமார் , அதிமுக கூட்டணி 40தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என்றும் , அதிமுக தான் எனது தாய் கழகம் ஏனெனில் எனது தாய் அதிமுக எம்பியாக இருந்துள்ளார் என்றார்.மக்களை பொறுத்தவரை மக்கள் அதிமுக பக்கம் இருப்பதாகவும்,
இரட்டை இலை பக்கம் மக்கள் இருப்பதால் அதிமுகவை பொறுத்தவரை மக்களுடன் தான் கூட்டணி என்றார்.இந்த தொகுதிக்கு மக்கள் சேவை பணியாற்றுவது முதல் கடமை என்றும் தமிழகத்தில் கடந்த 10ஆண்டுகாலத்தில் மத்திய அரசு எந்த திட்டம் செய்யவில்லை , அந்த உரிமை கேட்பது தான் எனது முதல் பணி என்றார்.