தேசிய அளவில் கொல்கத்தாவில் நடைபெற்ற அபாக்கஸ் போட்டிகளில் நவோதயா பள்ளி மாணவர் சாதனை !!
டிசம்பர் 09 கொல்கத்தாவில் இருப்பத்தி ஒன்றாம் ஆண்டு தேசிய அளவிலான அபாக்கஸ் போட்டி கடந்த நவம்பர் மாதம் 10ஆம் தேதி நடைபெற்றது. அதில் பல்வேறு மாநிலங்களில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவியர்கள் கலந்துகொண்டனர். அதில் நமது நவோதயா பள்ளி மாணவர் ஆதேஸ் தேவா (ஏழாம் வகுப்பு) அவர்களும் கலந்து கொண்டு மூன்றாவது பரிசு பெற்றுள்ளார். இன்று காலை பள்ளியில் நடைபெற்ற காலை வழிபாட்டுக் கூட்டத்தில் மாணவருக்கு பள்ளியின் நிர்வாகி கா. தேனருவி அவர்கள் கோப்பையும். சான்றிதழ்களும் வழங்கி பாரட்டுக்களை தெரிவித்தார். அவர் பேசுகையில் “கொல்கத்தாவில் நடைபெற்ற போட்டியில் கலந்துகொண்டு வெற்றி வாகை சூடிய மாணவரை வாழ்த்துவதற்கு வார்த்தைகளே இல்லை என்றும் அவரின் உழைப்பு, தன்னம்பிக்கை விடாமுயற்சி இவைகள் அனைத்தும் அவரின் வாழ்வில் உலகம் போற்றும் வகையில் மிகப்பெரிய சாதனையை வழங்கியே தீரும் என்று வாழ்த்தினார். மாணவரின் வெற்றிக்கு உறுதுனையாக இருந்து கொல்கத்தாவிற்கு அழைத்துச் சென்று வந்த பெற்றோர்களையும் வெகுவாக பாராட்டினார். பள்ளி முதல்வர், ஆசிரியர்கள், சகமாணவ, மாணவியர்கள் அணைவரும் வாழ்த்துகளையும், பாரட்டுகளையும் தெரிவித்தனர்.