தடையை மீறி பேரணி சென்ற 140 விவசாயிகள் மீது வழக்கு

ஒகேனக்கலில் அனுமதி இன்றி பேரணி நடத்திய விவசாய சங்கத்தினர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர்.

Update: 2024-06-14 09:55 GMT

வழக்குப் பதிவு

தமிழக அனைத்து விவசாயிகள் சங்கம் சார்பில், கர்நாடகாவிடம் உரிய தண்ணீரை பெற்றுத் தரவும், மேகதாது அணை கட்டுமான பணியை சட்டப்படி நிறுத்தவும், ராசி மணலில் அணை கட்ட வலியுறுத்தியும், தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கலில் தடையை மீறி நேற்று முன்தினம் பேரணி நடந்தது. தமிழக அனைத்து விவசாயிகள் சங்க தலைவர் பி.ஆர். பாண்டியன் தலைமை வகித்து, பேரணியை தொடங்கி வைத்தார்.

அதில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர். இதையடுத்து பி.ஆர். பாண்டியன், தமிழக அனைத்து விவசாய சங்க, தர்மபுரி மண்டல தலைவர் கே.சின்னசாமி, கொங்கு மண்டல நீர் ஆதார குழு தலைவர் ராமசாமி, விவசாய சங்க மாநில செய்தி தொடர்பாளர் ராசு உள்பட 140 பேர் மீது, ஒகேனக்கல் காவல்துறையினர் பொதுமக்களுக்கும். போக்குவரத்திற்கும் இடையூறாக பேரணி சென்றதாக 3 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Tags:    

Similar News