இந்திராகாந்தி நினைவுதினம் அனுசரிப்பு
By : King 24X7 News (B)
Update: 2023-10-31 15:18 GMT
இந்திராகாந்தி நினைவுதினம் அனுசரிப்பு
மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் நினைவுதினம் இன்று அனுசரிக்கபட்டது. இதனையொட்டி அரியலூர் பேருந்து நிலையம் அருகேயுள்ள காமராஜர் சிலை முன்பு வைக்கபட்டிருந்த இந்திரா காந்தியின் திருவுறுவ படத்திற்கு காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவர் சங்கர் தலைமையில் மலர்தூவி மரியாதை செலுத்தபட்டது.
பின்னர் தேசிய ஒற்றுமை நாள் உறுதிமொழி ஏற்கபட்டது. இந்த நிகழ்ச்சியில் நகர தலைவர் மாமு. சிவக்குமார், வட்டார தலைவர் பாலகிருஷ்ணன் உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதேபோல் சர்தார் வல்லபாய் பட்டேலின் பிறந்தநாள் விழாவும் கொண்டாடபட்டது குறிப்பிடதக்கது