கிறிஸ்தவர்கள் தீச்சட்டி ஏந்தி அந்தோணியார் ஆலயத்தில் நூதன வழிபாடு

மயிலாடுதுறை அருகே கஞ்சாநகரத்தில் புனித அந்தோணியார் ஆலயத்தில் அங்கப் பிரதட்சணம், தீச்சட்டி ஏந்தி முட்டி போட்டு சென்றும் நூதன வழிபாடு

Update: 2024-01-02 09:52 GMT

நூதன வழிபாட்டில் ஈடுபட்ட கிறிஸ்தவர்கள்

மயிலாடுதுறை அருகே கஞ்சாநகரத்தில் 250 ஆண்டுகள் பழமை வாய்ந்த அந்தோனியார் ஆலயம் அமைந்துள்ளது. இங்கு நோய் தீர வேண்டியும், வேண்டிய காரியங்கள் வெற்றி பெற வேண்டியும் கடந்த 51 ஆண்டுகளாக பக்தர்கள் வினோத வழிபாட்டில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்தோணியார் ஆலயத்திற்கு எதிரே உள்ள ஊர் பொது குளத்தில் பக்தர்கள் நீராடி விட்டு 500 மீட்டர் தொலைவில் உள்ள அந்தோனியார் ஆலயத்திற்கு அங்கப் பிரதட்சணம் செய்தும் முட்டி போட்டு கையில் மெழுகுவர்த்தியை ஏந்தி தீபம் அணையாமல் கோயில் வரை முட்டியால் நடந்தும், தீச்சட்டி ஏந்தியும் சிறப்பு வழிபாடு செய்வது வழக்கம்.

இந்த ஆண்டும் தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் நூதன முறையில் வழிபாட்டில் ஈடுபட்டனர். தொடர்ந்து அந்தோனியார் ஆலயத்தில் சிறப்பு திருப்பலி பூஜை செய்யப்பட்டது.

Tags:    

Similar News