கரூரை வலம் வந்த கார்மேகங்கள்
கரூரில் பெய்த மழையால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.;
Update: 2024-05-13 14:22 GMT
கரூரில் பெய்த மழையால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
கரூரை வலம் வந்த கார்மேகங்கள். கவலையை மறந்த பொதுமக்கள். தமிழகத்தில் கோடை காலம் துவங்கியது முதலே வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. முன் எப்போதும் இல்லாத அளவிற்கு வெப்பத்தின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்ததால், பொதுமக்கள் பொதுவெளியில் செல்லாமல் வீட்டிற்குள்ளேயே முடங்கினர். குறிப்பாக கரூர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு 111 டிகிரி வரை வெயில் வாட்டி வதைத்தது. தற்போது படிப்படியாக குறைந்து 105 டிகிரியாக உள்ளது. தமிழகத்தில் பரவலாக அனைத்து மாவட்டங்களிலும் மழை பெய்து வருகிறது. இதேபோல இன்று மழை பெய்வதற்காக, கார் மேகங்கள் கரூர் நகரை வலம் வந்தது. இதனைக் கண்ட பொதுமக்கள் மகிழ்ச்சியில் திளைத்தனர். காரணம் வெயிலின் தாக்கம் குறைந்து, இதமான தென்றல் காற்று அவர்களை வருடி சென்றது தான் காரணம்.