எம்ஜிஆர் வேடமிட்டு வாக்கு சேகரிப்பு

பொன்னமராவதியில் முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் வேடமிட்டவருடன் அதிமுகவினர் வாக்குசேகரிப்பில் ஈடுபட்டனர்.

Update: 2024-04-16 06:12 GMT

 பிரசாரம்

சிவகங்கை மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் அ.சேவியர் தாஸை ஆதரித்து, தொகுதி முழுவதும் அதிமுகவினர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பிரசாரத்தின் ஒரு பகுதியாக பொன்னமராவதி ஒன்றியம் வேகுப்பட்டி ஊராட்சியில் அதிமுக மாணவரணி இணைச்செயலர் பெரி. முத்து தலைமையில் வாக்குகள்சேகரிப்பில் ஈடுபட்டபோது பொதுமக்களை கவரும் வகையில் எம்ஜிஆர் வேடமிட்டவரை உடன் அழைத்துச்சென்றனர். பாண்டிமான் நகர், நேரு நகர், அம்மா நகர், சிவசக்தி நகர், வலம்புரி விநாயகர் நகர், உள்ளிட்ட வீதிகளில் பிரசாரம் நடைபெற்றது.
Tags:    

Similar News