கடையத்தில் இறந்த திமுக பிரமுகர் குடும்பத்திற்கு ஆறுதல்

கடையத்தில் இறந்த திமுக பிரமுகர் குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவிக்கப்பட்டது.

Update: 2024-05-13 12:42 GMT

நிதியுதவி அளிப்பு

தென்காசி மாவட்டம் கடையம் வடக்கு ஒன்றியம் அஞ்சான் கட்டளை ஊராட்சி மன்ற உறுப்பினர் வாசகம் பனைமரத் திலிருந்து தவறி விழுந்து மரணமடைந்தார். இது குறித்து தகவல் அறிந்த தென்காசி தெற்கு மாவட்ட திமுக மாவட்ட பொறுப்பாளர் வே. ஜெயபாலன் இன்று வாசகம் வீட்டிற்கு சென்று அவரை குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் தெரிவித்து ரூபாய் 10, 000 நிதி உதவி அளித்தார்.

இந்நிகழ்வில், ஒன்றிய திமுக செயலாளர் மகேஷ் மாயவன், மாவட்ட பிரதிநிதி பொன் செல்வன்,

அஞ்சான் கட்டளை பஞ். துணை தலைவர் சுதன், ராஜேஷ், மாவட்ட சிறுபான்மை அணி துணை அமைப்பாளர்கள் அற்புதராஜ், தளபதி முருகேசன், அஞ்சான்கட்டளை நிர்வாகிகள் செல்வராஜ், பிச்சையா ஆசாரி, தங்கபாண்டி, சுரேஷ், அன்பு, அந்தோணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News