காட்பாடியில் கூட்டுறவு வார விழா

கூட்டுறவு வார விழாவில் நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பேச்சு

Update: 2023-11-20 10:27 GMT

கடன் வழங்கிய அமைச்சர்


இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

வேலூர்மாவட்டம்,காட்பாடியில் கூட்டுறவுத்துறையின் சார்பில் 70 ஆவது அனைத்திந்திய கூட்டுறவு வார விழாவானது வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் தலைமையில் இன்று நடைபெற்றது. இதில் மாநில நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பங்கேற்று , மகளிர் குழுவினர் உள்பட 2,547 பேருக்கு ரூ.17. 42 கோடி மதிப்பில் கடனுதவிகளை அமைச்சர் துரைமுருகன் வழங்கினார்.

இவ்விழாவில் கூட்டுறவு உறுதிமொழி எடுக்கப்பட்டு எடுக்கப்பட்டது. நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் துரைமுருகன், கூட்டுறவு துறையின் மூலம் பல்வேறு கடன் நிதி உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. அதனை ஏழை எளிய மக்கள் மகளிர் குழுவினர் ஆகியோர் கடன் உதவிகளைப் பெற்று பயனடைய வேண்டும். அதே நேரத்தில் வாங்கிய கடனை திருப்பி கட்ட வேண்டும். அரசு ரத்து செய்துவிடும் என்று நினைக்க வேண்டாம். கடனை வாங்கினால் அதனை திருப்பி கட்ட வேண்டும்.

ஆனால் கடனை வாங்குவோம் தள்ளுபடி செய்வார்கள் என்ற எண்ணத்தில் கூட்டுறவுத் துறையில் கடனை வாங்குகின்றனர் அது தவறான எண்ணம் ஆகும். வாங்கிய கடனை திருப்பி செலுத்தினால் தான் மற்றவர்களுக்கு கடன் நிதி உதவி வழங்க முடியும். என்று கூறினார். மேலும் அதிக அளவில் கூட்டுறவுத்துறையின் மூலம் பகுதி நேர நியாய விலைகடைகளை திறக்கப்பட்டு வருகிறது.

இதனால் பொதுமக்கள் தங்கள் பகுதிகளிலேயே அத்தியாவசிய பொருட்களை பெற்றுக் கொள்ளலாம். பகுதி நேர நியாய விலை கடைகள் திறக்கப்பட்டு வருவது பாராட்டுக்குரியது. என அமைச்சர் துரைமுருகன் கூறினார். இவ்விழாவில் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன், வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News