தென்காசியில் வேகமாக நிரம்பி வரும் அணைகள்
மழை காரணமாக தென்காசியிலுள்ள அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன.
Update: 2024-06-19 12:18 GMT
தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் அவ்வப்போது பெய்து வரும் மழை காரணமாக, தென்காசி மாவட்டத்தில் உள்ள குண்டாறு, ராமநதி உள்ளிட்ட 5 நீர் தேக்கங்களில் நீரின் அளவு அதிகரித்து வருகின்றன. 36.10 அடி கொள்ளளவு கொண்ட குண்டாறு அணை, தற்போது 31 அடியாகவும், 84 அடி கொள்ளளவு கொண்ட ராமநதி 65 அடியாகவும் நீர் அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் அப்பகுதியில் உள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.