அண்ணாமலையின் பகல் கனவு பலிக்காது - லெனின் பிரசாத்
இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்தவர் காமராஜர் அவரோடு ஒப்பிடுவதற்கு மோடிக்கு என்ன தகுதி இருக்கிறது,அண்ணாமலை தன்னை திருத்தி கொள்ள வேண்டும், தமிழகத்தில் 25 இடங்களில் பா.ஜ.க வெல்லும் என்பது அண்ணாமலையின் பகல் கனவு , பகல் கனவு என்றும் பலிக்காது என தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் தலைவர் லெனின் பிரசாத் தெரிவித்தார்.;
Update: 2024-01-14 06:00 GMT
லெனின் பிரசாத்
ஈரோடு மாவட்டம் அரச்சலூர் அருகேயுள்ள அட்டவணை அனுமன்பள்ளி காங்கிரஸ் சார்பில் சமத்துவ பொங்கல் விழா , பாரம்பரிய விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது.இதில் தமிழக இளைஞர் காங்கிரஸ் தலைவர் லெனின் பிரசாத் கலந்து கொண்டு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தமிழக இளைஞர் காங்கிரஸ் தலைவர் லெனின் பிரசாத் , 2024 நாடாளுமன்ற தேர்தலில் இந்திய கூட்டணி 400 இடங்களில் வெல்லும் என்றார். பா.ஜ.க தலைவர் அண்ணாமலை காமராஜரோடு மோடியை ஒப்பிட்டு பேசியதற்கு தமிழக இளைஞர் காங்கிரஸ் சார்பில் கடும் கண்டனத்தை தெரிவித்து கொள்வதாகவும், இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்தவர் காமராஜர் அவரோடு ஒப்பிடுவதற்கு எதிலும் மோடிக்கு என்ன தகுதி இருக்கிறது என்றார். அண்ணாமலை தன்னை திருத்தி கொள்ள வேண்டும் என்றார். தமிழகத்தில் 25 இடங்களில் பா.ஜ.க வெல்லும் என்பது அண்ணாமலையின் பகல் கனவு என்றும் , பகல் கனவு பலிக்காது என்றார்.