ஆம்பூர் அருகே காணாமல் போன கிணற்றில் சடலமாக மீட்பு
ஆம்பூர் அருகே காணாமல் போன இளைஞர் விவசாய நிலத்தில் உள்ள பாழடைந்த கிணற்றில் சடலமாக மீட்கப்பட்டார்.
திருப்பத்தூர் மாவட்டம்.. ஆம்பூர் அடுத்த வீராங்குப்பம் பகுதியை சேர்ந்தவர் குமரன் (18) தேங்காய் உரிக்கும் வேலை செய்து வரும் இவர், கடந்த ஞாயிற்றுகிழமை முதல் காணாமல் போன நிலையில், அவரது பெற்றோர்கள் குமரனை பல இடங்களில் தேடியுள்ளனர்.
இந்நிலையில் அதே பகுதியில் உள்ள தயாளன் என்பவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில், பாழடைந்த கிணற்றில் சடலமாக இருப்பதை கண்ட அப்பகுதி மக்கள், இதுகுறித்து உடனடியாக உமராபாத் காவல்துறையினர் மற்றும் ஆம்பூர் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர்.
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் மற்றும் தீயணைப்புத்துறையினர், பாழடைந்த கிணற்றில் இருந்து இளைஞரின் உடலை மீட்ட தீயணைப்புத்துறையினர் மீட்டனர், அதனை தொடர்ந்து இளைஞரினர உடலை உமராபாத் காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து,
இச்சம்பவம் குறித்து, வழக்குபதிவு செய்து, இளைஞர், குடிபோதையில் பாழடைந்த கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்தாரா? அல்லது வேறேதேனும் காரணமா என பல்வேறு கோணங்களில் காவல்துறையினர் விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர்.
மேலும் காணாமல் போன இளைஞர் பாழடைந்த கிணற்றில் சடலமாக மீட்க்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..