கீழ்வேளூர் அருகே சாமி சிலையின் மார்பு, கை கண்டுபிடிப்பு

கீழ்வேளூர் அருகே சாமி சிலையின் மார்பு, கை கண்டுபிடிக்கப்பட்டது.

Update: 2024-06-24 12:08 GMT

சாமி சிலை

நாகை மாவட்டம் கீழ்வேளூரை அடுத்த வெண்மணி ஊராட்சி கீழகாவாலக்குடி  சிவன் கோவில் தெருவில் அரசுக்கு சொந்தமான குளம் உள்ளது. இந்த குளத்தில் அந்த பகுதியை சேர்ந்த சிறுவர்கள் நேற்று முன்தினம் மாலை  குளித்து கொண்டிருந்த போது  குளத்தில் ஒரமாக  2 பொருட்கள் கிடப்பதை பார்த்து வெளியே எடுத்தனர்.

உறவினர்களுக்கு தகவல் அளித்து அவர்கள். வந்து  பார்த்த போது  உலோகத்தாலான சிலையின் மார்பு பகுதி மற்றும் கை பகுதி தனித்தனியே இருந்து உள்ளது. இது குறித்து அப்பகுதி மக்கள் கிராம நிர்வாக அலுவலர் தினேஷ்க்கு  தகவல் தெரிவித்தனர். கிராம நிர்வாக அலுவலர் தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த வருவாய் ஆய்வாளர் சசிகலா,மண்டல துணை தாசில்தார் வெற்றி செல்வன் மற்றும் போலீசார் சிலையின் இரு பகுதியை  மீட்டு  கீழ்வேளூர் தாசில்தார் அலுவலகத்தில் தாசில்தார் ரமேஷ் இடம் ஒப்படைக்கப்பட்டது.

தாசில்தார் அலுவலகத்தில் உள்ள பாதுகாப்பு அறையில் சிலை பாகங்கள் வைக்கப்பட்டுள்ளது. இந்த உலோக பாகங்கள் ஐம்பொன்னாலைதா, இந்த சிலை எந்த காலத்துடைது. இது எப்படி குளத்திற்கு வந்தது, ஏதாவது ஊரில் காணாமல் போன சிலையா என பல்வேறு கோணத்தில்  வருவாய்துறை, காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.  இது குறித்து கிராம நிர்வாக அலுவலர் தினேஷ் கொடுத்த புகாரின் பேரில் கீழ்வேளூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் இந்த உலோக பாகங்கள் ஐம்பொன்னாலைதா, இந்த சிலை எந்த காலத்துடைது. இது எப்படி குளத்திற்கு வந்தது, ஏதாவது ஊரில் காணாமல் போன சிலையா என பல்வேறு கோணத்தில்  வருவாய்துறை, காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News