வடலூர்: சிஐடியு சார்பில் நீர் மோர், அன்னதானம் வழங்குதல்
வடலூர் சத்திய ஞான சபையில் ஜோதி தரிசன விழாவை முன்னிட்டு சிஐடியு சார்பில் நீர் மோர், அன்னதானம் வழங்கப்பட்டது.;
Update: 2024-01-25 17:46 GMT
அன்னதானம் வழங்குதல்
கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி வட்டம் வடலூர் வள்ளலார் ராமலிங்க அடிகளார் 153 ஆண்டு தைப்பூச விழாவை முன்னிட்டு சி ஐ டி யு நெய்வேலி என்எல்சி தொழிலாளர் சங்கத்தின் சார்பில் உணவு மற்றும் நீர் மோர் வழங்கும் நிகழ்ச்சி வடலூரில் நடைபெற்றது. இதனை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் ஜி மாதவன் துவக்கி வைத்தார். உடன் இந்திய ஜனநாயக வாலிபர் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.