தேர்த்திருவிழா - கௌரவ பலிஜவார் நாயுடுகள் மண்டப கட்டளை
இராசிபுரம் அருள்மிகு செல்லாண்டியம்மன் அருள்மிகு நித்தியசுமங்கலி மாரியம்மன், அருள்மிகு வீர ஆஞ்சநேயர் திருக்கோவில்களின் ஐப்பசி மாத தேர்த் திருவிழாவையொட்டி கௌரவ பலிஜவார் நாயுடுகள் மண்டப கட்டளை சிறப்பாக நடைபெற்றது. நாயுடு சமூகத்தின் சார்பில் மண்டப கட்டளை முன்னிட்டு பஜனை மடத்திற்க்கு சமூக மக்கள் அனைவரும் வரவழைக்கப்பட்டனர். ஸ்ரீ ஆஞ்சநேயர்,ஸ்ரீ செல்லியம்மனுக்கு அபிஷேகம், ஸ்ரீ பட்டத்து அரசி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் ஆகியவை நடைபெற்றது. தொடர்ந்து கவரைத் தெரு, கதர்க்கடை அருகில் அமரர் சேர்மன்.கண்ணைய நாயுடு நினைவு அலங்கார பந்தலில் சேலம் விஜய் டிவி புகழ் மேஸ்ட்ரோ குழுவினரின் மாபெரும் இன்னிசை கச்சேரி நடத்தினர். ஸ்ரீ நித்திய சுமங்கலி மாரியம்மன் திருக்கோவிலிருந்து புஷ்ப அலங்கார பல்லக்கும் வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு, நையாண்டி மேளக் கச்சேரி வாணவேடிக்கை யுடன் அம்மன் திருவிதி உலாவில் இன்று அதிகாலை அம்மன் ஊர்வலம் முடிந்து அக்னிகுண்டம் பிரவேசித்தலை தொடர்ந்து பொங்கல் வைத்தல், குதிரை வாகனத்தில் அம்மன் திருத்தேர் உற்சவம் நடந்தது. இந்நிகழ்ச்சியில் கெளரவ பலியவார் நாயுடுகள் சங்கம், கவரைத் தெரு சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் , பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.