திருச்சி விமான நிலையத்தில் ரூ. 15.12 லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல்
மலேசியாவில் இருந்து பயணியொருவா் கடத்தி வந்த ரூ.15.12 லட்சம் மதிப்பிலான தங்கத்தை திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் சுங்கத் துறையினா் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா்
மலேசியா தலைநகா் கோலாலம்பூரிலிருந்து திருச்சி பன்னாட்டு விமான நிலையத்துக்கு, ஏா் ஏசியா விமானம் புதன்கிழமை இரவு வந்தது. அதில் வந்த பயணிகளையும், அவா்களின் உடைமைகளையும் சுங்கத்துறையினா் வழக்கமான சோதனைக்கு உள்ளாக்கினா். அப்போது, பயணி ஒருவா் கொண்டு வந்த சமையல் எரிவாயு உருளையில் பயன்படுத்தும் ரெகுலேட்டா் சாதனத்தில் பால்ரஸ் வடிவில் 194 கிராம் தங்கத்தை மறைத்து எடுத்து வந்தது தெரியவந்தது. அதன் மதிப்பு ரூ. 15.12 லட்சம். அதை வியாழக்கிழமை பறிமுதல் செய்த சுங்கத்துறையினா் அந்தப் பயணியிடம் தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.