வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள்; கலெக்டர் ஆய்வு

விருதுநகரில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்தல் திருத்தம் தொடர்பாக, பெறப்பட்ட மனுக்கள் மீது கலெக்டர் ஆய்வு செய்தார்.

Update: 2023-12-22 11:38 GMT

விருதுநகர் மாவட்டம், சாத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில், வாக்காளர் சிறப்பு சுருக்கத் திருத்தம் 2024-ஐ முன்னிட்டு, பொதுமக்களிடமிருந்து வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்தல் மற்றும் திருத்தம் மேற்கொள்வது தொடர்பாக, பெறப்பட்ட மனுக்கள் மீது மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சித்தலைவருமான ஜெயசீலன் நேரில் சென்று கள ஆய்வு மேற்கொண்டார். வாக்களர் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்தம் 2024-ன் ஒரு பகுதியாக, கடந்த அக்டோபர் 27ஆம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டு அன்று முதல் டிசம்பர் 9ஆம் தேதி வரை விருதுநகர் மாவட்டத்திற்குட்பட்ட ஏழு சட்டமன்ற தொகுதிகளிலும் பொதுமக்களிடமிருந்து புதிய வாக்காளராக பெயர் சேர்ப்பதற்கான 26,020 விண்ணப்பங்களும், வாக்காளர் பட்டியல் பெயர் நீக்கம் செய்வதற்கு 2,425 விண்ணப்பங்களும், வாக்காளர் பட்டியலில் திருத்தம் மேற்கொள்வதற்கான 13,357 விண்ணப்பங்களும், என மொத்தம் 41,803 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.

பெறப்பட்ட விண்ணப்பங்கள் மீதி தற்போது கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி, இன்று சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மேட்டமலை, வெங்கடாசலபுரம், சாத்தூர் நகராட்சி பகுதிகளில் பொதுமக்களிடமிருந்து வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் பெயர் நீக்கம் செய்தல் மற்றும் திருத்தம் மேற்கொள்வது தொடர்பாக, பெறப்பட்ட மனுக்கள் மீது மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சித்தலைவருமான ஜெயசீலன் கள ஆய்வு மேற்கொண்டார்.

Tags:    

Similar News