திருவள்ளூர்: தீ தடுப்பு ஒத்திகை விழிப்புணர்வு
திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் தீ தடுப்பு ஒத்திகை விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவ கல்லூரி, மருத்துவமனையில் தீயணைப்புத்துறை சார்பில் எதிர்பாராமல் ஏற்படும் தீ விபத்தை எவ்வாறு தடுக்க வேண்டும் என்பது குறித்த வழிமுறைகளும் மற்றும் தங்களை எவ்விதமாக காத்துக் கொள்ளும் தற்பாதுகாப்புகளை குறித்து தீயணைப்பு அலுவலர் வில்சன் ராஜ்குமார் தத்ரூபமாக செயல்படுத்தி காட்டினார்.
அதில் தீ அதிகமாக பரவுதலை கட்டுப்படுத்தும் விதமாக சணல் சாக்கு துணிகளை தண்ணீரில் நனைத்து எரிந்து கொண்டிருக்கும் தீ மீது போடும்போது தீ முழுவதுமாக கட்டுப்படுத்த முடியும் என்பதனை செயல் முறையில் தீயணைப்புத் துறையினர் செய்து காட்டினார்கள். மேலும் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் ரேவதி தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் துணை முதல்வர் திலகவதி, ஆர்.எம்.ஓ ராஜ்குமார் ஏ.ஆர்.எம்.ஓ பிரபுஷங்கர் மற்றும் மருத்துவர்கள் செவிலியர்கள் துப்புரவு பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் தீ விபத்து தடுப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.