சாகர் மித்ரா திட்டத்தில் பணியாற்ற மீனவர்கள் விண்ணப்பிக்கலாம்: ஆட்சியர்
சாகர் மித்ரா திட்டத்தில் பணியாற்ற மீனவர்கள் விண்ணப்பிக்கலாம் நாகப்பட் டினம் மாவட்ட ஆட்சி தலைவர் ஜானி டாம்வர்கீஸ் தெரிவித்துள்ளார்.
நாகப்பட் டினம் மாவட்ட ஆட்சி தலைவர் ஜானி டாம்வர்கீஸ்வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவதுநாகப்பட்டினம் மாவட்ட மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையில் சாகர் மித்ரா திட்டத்தின் கீழ் ஒப்பந்த அடிப்படையிலான பணிக்கு குறைந்தபட்ச கல்வி தகுதி இளங்கலை பட்டபடிப்பில் மீன் வள அறிவியல், கடல் உயிரியல், விலங்கியல் ஆகிய கல்வி தகுதியில் விண்ணப்பிக்கலாம்.
இந்த கல்வி தகுதியில் விண்ணப் தாரர்கள் இல்லாத பட்சத்தில் பிற கல்வி தகுதியான வேதி யல், தாவரவியல், உயிர்வேதியியல், நுண்ணுயிரியல் இயற்பியல் கல்வி தகுதி பெற்றவர்கள் தகுதியானதாக கருதப்படும். தகவல் தொழில்நுட்பம் அறிந்திருந்தால் முன்னுரிமை அளிக்கப்படும். தகுதி வயது வரம்புகள் விண்ணப்பதாரர் தொடர்புடைய மாவட்டத்தில் சம்மந்தட் பட்ட வட்டத்தில் மீனவ கிராமம்,
வருவாய் கிராமத்தை சேர்ந்த உள்ள நபராக இருக்க வேண்டும். சம்மந்தட் பட்ட மீனவ கிராமம், வருவாய் கிராமம், தாலுக்காவில் விண்ணப்பதாரர்கள் இல்லாத பட்சத்தில் சம்மந்தப்பட்ட மாவட்டத்தில் உள்ள அண்மை கிராமம், வருவாய் கிரா மம், வட்டத்தில் வசிக்கும் நபராக இருத்தல் வேண்டும் நம்பியார் நகர், வானவன்மகாதேவி, சிந்தாமணிக்காடு. மணியன்தீவு மீனவ கிராமங்களில் பணியிடம். 4 காலி யிடம் ஆகும். 35 வயதுக்கு மேல் இருத்தல் வேண்டும்.
தகுதியுள்ளவர்கள் வரும் 15ம் தேதிக்குள் முழுமையாக பூர்த்தி செய்த விண்ணப்பத்தை நாகப்பட்டினம் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவல கத்தில் சமர்பிக்க வேண்டும் இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.