சாத்தூரில் வழிகாட்டும் கண்காட்சி

விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் சார்பில் தொழில் நெறி வழிகாட்டும் கண்காட்சி மற்றும் கருத்தரங்கு நிகழ்ச்சி நடைபெற்றது

Update: 2024-01-20 12:04 GMT
சான்றிதழ்கள் வழங்கிய ஆட்சியர்

விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் தனியார் கல்லூரியில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் சார்பில் தொழில் நெறி வழிகாட்டும் கண்காட்சி மற்றும் கருத்தரங்கு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தார்.

மேலும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் மூலம் அமைக்கப்பட்டு இருந்த தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் இந்திய ஆட்சிப் பணித் தேர்வாணையம் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் உள்ளிட்ட போட்டி தேர்வுகளுக்கான புத்தகங்கள் அடங்கிய கண் காட்சியை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டார்.

மேலும் மாணவர்கள் பயன்பெறும் வகையில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் வாயிலாக பிரத்யேக மாக தயாரிக்கப்பட்ட போட்டித் தேர்வு மற்றும் வேலை வாய்ப்பு வழிகாட்டி கையேட்டினை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டார். பின்னர் நிகழ்ச்சியில் பேசிய மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் மாணவர்கள் கல்லூரி படிப்பை முடித்து செல்லும் போது அவர்களுக்கு வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டுதல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்து வது இந்த நிகழ்ச்சியின் முக்கிய நோக்கமாகும் என்றார்.

இன்று உலக அளவில் இருக்கக் கூடிய மிக முக்கியமான பிரச்சனை வேலைவாய்ப்பின்மை ஆகும். அதே நேரத்தில் பல மில்லியன் கணக்கான வேலைகளுக்கு ஆட்கள் சரியாக கிடைக்க வில்லை என்று ஆய்வுகள் தெரிவிக்கிறது என்றார்.

மேலும் வேலை வாய்ப்பு என்பது எவ்வளவு பெரிய பிரச்சனையோ அதற்கு இணையான பிரச்சனையாக வேலைக்கான தகுதியின்மை இல்லை எனப்படுகிறது என்றார். மேலும் அடுத்து வரக்கூடிய 40 ஆண்டுகள் வரை செயற்கை நுண்ணறிவு, டேட்டா சயின்ஸ், ரோபோடிக்ஸ், பிண்டெக், டீப் டெக்னாலஜி போன்ற நவீன தொழில் நுட்பங்கள் உலகத்தை அனைத்து துறைகளிலும் முக்கிய பங்காற்ற போகிறது.

இது போன்ற தொழில்நுட்பங்களை கற்றுக் கொள்ள வேண்டும். தங்களுக்கான துறையில் நிபுணத்துவம் பெற்றவர் களாக தங்கள் அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்றார்.

Tags:    

Similar News