முதல்வர் வரும் ஊரில் தெருக்களில் ஓடும் பாதாள சாக்கடை நீர்
தமிழக முதல்வர் மாவட்ட தலைநகர் புதிய கட்டிடம் திறந்து வைக்க மயிலாடுதுறைக்கு வரும் நேரத்தில் மயிலாடுதுறை நகரில் பல்வேறு தெருக்களில் பாதாள சாக்கடை நீர் வழிந்தோடி முகம் சுழிக்க வைக்கிறது.;
Update: 2024-03-03 17:56 GMT
பாதாள சாக்கடை நீர்
மயிலாடுதுறை தமிழகத்தின் 38 வது மாவட்டமாக அறிவிக்கப்பட்டது. மயிலாடுதுறை மன்னம்பந்தலில் புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகம் ரூ.114 கோயில் ஏழு மாடிகளைக் கொண்ட வளாகம் கட்டப்பட்டுள்ளது. அதன் திறப்பு விழா திங்கட்கிழமை(4-3-24) காலை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெறுகிறது. இவ்விழாவில் முதல்வருடன் பல்வேறு அமைச்சர்களும் எம் பி எம் எல் ஏக்களும் கலந்து கொள்கின்றனர். மாவட்டம் முழுவதும் சுகாதாரப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் மயிலாடுதுறை நகரில் பல்வேறு தெருக்களில் பாதாள சாக்கடை கழிவு நீர் வழிந்தோடுவது சாலையில் செல்வோரை முகம் சுழிக்க வைப்பது வேதனை அளிக்கிறது. உடனடியாக இதை சரி செய்ய வேண்டும் என்றும் நிரந்தர தீர்வு காண வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.