நடப்போம் நலம் பெறுவோம் நடை பயணம் ஏராளமானோர் பங்கேற்பு
சென்னை, பெசண்ட் நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் காணொளி காட்சி வாயிலாக அனைத்து மாவட்டங்களிலும் "நடப்போம் நலம் பெறுவோம்" திட்டத்தை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறையின் சார்பில் இன்று சென்னை, பெசண்ட் நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் காணொளி காட்சி வாயிலாக அனைத்து மாவட்டங்களிலும் "நடப்போம் நலம் பெறுவோம்" திட்டத்தை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதையடுத்து மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் "நடப்போம் – நலம் பெறுவோம்" ஆரோக்கிய நடைபயண திட்டத்தை அமைச்சர்கள் மூர்த்தி, பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
மதுரை மாவட்டத்தில் நடைப்பயிற்சியை ஊக்குவிக்கும் வகையில் மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானம் நுழைவு வாயில் முதல் தொடங்கி ஐய்யர் பங்களா சந்திப்பு வழியாக மீண்டும் ரேஸ்கோர்ஸ் மைதானம் நுழைவு வாயில் வரை மொத்தம் (8கி.மி) தூரம் ஆரோக்கியம் நடைபயணம் நடைபெற்றது.
இந்த நடைபயணத்தில் பயணிப்பவர்களுக்கு வாகனங்கள் நிறுத்த போதிய இடவசதி, ஓய்வறை கள், இருக்கை வசதிகள், கழிப்பறை மற்றும் பாதுகாப்பு வசதிகளுடன் ஏற்படுத்தப்பட்டிருந்தது. நிகழ்ச்சியில் கலெக்டர் சங்கீதா, மாநகர போலீஸ் கமிஷனர் லோகநாதன், மேயர் இந்திராணி, மாநகராட்சி ஆணையாளர் மதுபாலன், கூடுதல் கலெக்டர் மோனிகா ராணா, மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை முதல்வர் ரத்னவேல் மாநகராட்சி துணை மேயர் நாகராஜன் உட்பட பலரும் கலந்து கொண்டனர்