தனியாக நலவாரியம் அமைக்க வேண்டும் : ஒலி பெருக்கி அமைப்பாளர் சங்கம் கோரிக்கை 

ஒலிபெருக்கி அமைப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர்

Update: 2023-12-20 01:34 GMT
குத்து விளக்கேற்றும் எம்எல்ஏ அசோக்குமார்
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை, சீதாம்பாள்புரம் மாதா மஹாலில் தமிழ்நாடு மைக் செட் நண்பர்கள் நலச்சங்கம் இரண்டாம் ஆண்டு தொடக்க விழா செவ்வாய்க்கிழமை காலை நடைபெற்றது.  நிகழ்ச்சியில், மாநில ஒழுங்கு நடவடிக்கை குழு தலைவர் ஆர். பன்னீர்செல்வம் வரவேற்புரையாற்றினார். சங்கத்தின் சேர்மன்  எம்.வரதராஜன், கௌரவ தலைவர் கே.ஆர்.வடிவேல், தலைவர் கே.செல்வம், செயலாளர் எஸ்.அந்தோணி யேசுதாஸ் ஆகியோர் தலைமை வகித்தனர். மாநில துணைத்தலைவர் மு.த.முகிலன் கோரிக்கை விளக்க உரையாற்றினார்.  பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் கா.அண்ணாதுரை, பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் நா.அசோக்குமார் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு வாழ்த்திப் பேசினர். நிறைவாக மணிமாறன் நன்றி கூறினார்.  இதில், தமிழ்நாடு முழுவதிலிருந்து ஆயிரக்கணக்கான ஒலி&ஒளி, பந்தல், மேடை அலங்காரம், வாடகைப் பாத்திரக் கடை அமைப்பாளர்கள் கலந்து கொண்டனர்.  இதில், "தமிழகம் முழுவதும் உள்ள திருமணம் சார்ந்த தொழிலில் ஈடுபட்டு வரும் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் நலம் காக்க, தனியாக நல வாரியம் அமைக்க வேண்டும். இத்தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு மாவட்ட தொழில் மையம் மூலம் வங்கிக் கடன் வழங்க வேண்டும்" என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.  விழா ஏற்பாடுகளை தஞ்சை, நாகை, திருவாரூர், புதுக்கோட்டை மாவட்ட சங்கத்தினர் செய்திருந்தனர்.    .
Tags:    

Similar News