வாக்கு சேகரிப்பு ஈடுபட்ட அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!

திமுக வேட்பாளர் சி.என். அண்ணாதுரை ஆதரித்து வாக்கு சேகரிப்பு ஈடுபட்ட தமிழக அமைச்சர்.

Update: 2024-03-26 08:59 GMT
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் புதிய பேருந்து நிலையம் எதிரில் தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திருவண்ணாமலை நாடாளுமன்ற திமுக வேட்பாளர் அண்ணாதுரையை ஆதரித்து வாக்கு சேகரிப்பு. திருவண்ணாமலை நாடாளுமன்ற திமுக வேட்பாளராக அண்ணாதுரை மூனாவது முறையாக களம் இறக்கப்பட்டுள்ளார் சென்றாண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட அண்ணாதுரை சுமார் மூன்று லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அதேபோல் இந்த ஆண்டு திருவண்ணாமலை நாடாளுமன்ற வேட்பாளர் அண்ணாதுரை 4 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என நம்பிக்கை தெரிவித்தார். மேலும் அண்ணாதுரை வெற்றி பெற்றால் மாதத்தில் 2 நாட்கள் திருவண்ணாமலையிலே தங்கி பொதுமக்கள் பிரச்சனை தீர்க்கப்படும் என கூறி தீவிர வாக்கு சேகரிப்பு. கடந்த தேர்தலில் திமுக கூட்டணி 40க்கு 39 இடங்களில் வெற்றி பெற்றது. இந்த தேர்தலில் 40க்கு 40 வெற்றி பெற்று வருகின்ற ஜூன் மூன்றாம் தேதி கலைஞர் பிறந்த நாளுக்கு இந்த வெற்றியை பிறந்தநாள் பரிசாக வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டார் . தமிழகத்தில் இலவச அரசு பேருந்து தமிழக மக்கள் ஸ்டாலின் பேருந்து என செல்லமாக அழைக்கப்படுவதாகவும், உதயநிதி பெருமிதம். மேலும் சாத்தனூர் அணையில் இருந்து 56 கோடி மதிப்பீட்டில் குழாய் மூலம் கிராமப்பகுதிகளுக்கு குடிநீர் வசதி ஏற்பட்டு தருப்படும் எனவும் திருவண்ணாமலை - திருப்பத்தூர் ராயல் பாதை அமைக்கப்படும எனவும் தற்போது தகுதி வாய்ந்த குடும்பத் தலைவருக்கு வழங்குவதை போல அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என உறுதி கூறி வாக்கு சேகரித்தார். பச்சோந்தி போல எடப்பாடி ஆளுக்கு ஏற்றார்போல பேசுவதாகவும், ஒரே கொள்கையுடன் தான் திமுக பேசுவதாக அதிமுக மீது குற்றச்சாட்டு.
Tags:    

Similar News