ஆதிதிராவிடர், பழங்குடியினர் சார்பில் கண்காணிப்பு குழுகூட்டம்
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சார்பில் கண்காணிப்பு குழுகூட்டம் ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது.
By : King 24x7 Website
Update: 2023-12-30 16:25 GMT
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சார்பில் கண்காணிப்பு குழுகூட்டம் நடைபெற்றது. கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று ( மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தலைமையில், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பாக மாவட்ட அளவிலான விழிப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரபாகர் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பட்டியல் இன மக்களின் நிலுவை உள்ள வழக்குகளை உரிய காலத்திற்குள் விசாரணை மேற்கொண்டு, விசாரணை அறிக்கையினை தாக்கல் செய்யவும், குற்றவாளிகளை விரைந்து கைது செய்யவும் வலியுறுத்தப்பட்டது . மேலும், நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வன்கொடுமை தடுப்பு வழக்குகளை விரைந்து நடத்தி பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணம் மற்றும் நீதி பெற்றுத் தருவது குறித்தும் மாவட்ட ஆட்சிர் தங்கவேல் அரசுத்துறை அலுவலருக்கு அறிவுறுத்தினார். இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணன், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் சண்முகவடிவேல், கரூர் கோட்டாட்சியர் ரூபினா மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.